உழைப்பாளர்கள் தினமான மே 01ல் சி.ராஜதுரை ஏற்றப்பாட்டில் துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 38வது நாள் நீர்மோர் வழங்கல்

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் தாலுக்கா அலுவலகம் முன்புறம் இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு தண்ணீர் பந்தல் பங்குனி உத்திரம் திருநாள் அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து 38வது நாளாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

உழைப்பாளர்கள் தினமான மே 01 அன்று வெயிலின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க துறையூர் தொகுதி நில தரகர்கள் சங்க செயலாளர் சி.ராஜதுரை மற்றும் அவைத்தலைவர் பாபு என்கிற சாகுல்அமீது சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தண்ணீர், நீர்மோர், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி போன்றவை வழங்கப்பட்டது.

இதில் சங்கத் தலைவர் செயலாளர் எஸ் திருமுகம், துணைத் தலைவர் மீசை பாலு ,துணை செயலாளர் ப.கிருஷ்ணகுமார், துறையூர் தொகுதி தலைவர் என் நந்தகுமார், செயலாளர் சி.ராஜதுரை, பொருளாளர் எஸ் செந்தில்குமார், அவைத்தலைவர் பாபு மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள்,சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர் வெள்ளரிக்காய் தர்ப்பூசணி போன்றவை வழங்கினார்கள். வெயில் காலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி வரும் துறையூர் தொகுதி நிலத்தரகர்கள் சங்கத்தினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *