வங்கி ஏடிஎம்மில் தொடர்ச்சியாக 2 மணி நேரத்திற்கு மேல் சைரன் ஒலி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஐஓபி வங்கியின் ஏடிஎம் உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஏடிஎம்மில் காலை 8 மணி அளவில் திடீரென்று சைரன் ஒலித்தது. தொடர்ந்து சைரன் ஒலித்துக் கொண்டே இருந்ததால் பலர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர்.
மே தினம் விடுமுறை ஆனதால் வங்கி திறக்கப்படவில்லை. இருப்பினும் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரியப்படுத்தி, இரண்டு மணி நேரம் தாமதமாக வங்கி அதிகாரிகள் வந்து சைரன் ஒலியை நிறுத்தினார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.