செங்குன்றம் செய்தியாளர்

ரெட்டேரி விநாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் நெடுஞ்சாலை விநாயகபுரம் கல்பாளையம் அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து எட்டு லட்சம் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விநாயகபுரம் கல்பாளயத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43) என்பவருக்கு சொந்தமான செந்தில் மெடிக்கல் ஷாப் கடை உள்ளது . இதில் அனைத்து மருந்து வகைகளும் இங்கு இருப்பு வைத்து சில்லறை விற்பனை செய்வார்கள் . செந்திலுக்கு உதவியாக அவருடைய சகோதரர் கற்பகவேல் கடையில் இருந்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர் . இன்று காலை சுமார் 9 மணி அளவில் கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு பாதி திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில் உள்ளே சென்று பார்த்ததில் அங்கு கல்லாவில் உள்ளே இருந்த 8 லட்சம் பணம் திருடு போயிருந்தது . நடந்த இந்த சம்பவம் குறித்து உடனே புழல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் சரக உதவி கமிஷனர் சாகாதவன் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். உடனே கைரேகை நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது .

எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் போலீசாரின் ரோந்து பணி இருந்தும் இதுபோல் ஒரு குற்ற சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங் (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *