வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் ஆதிச்சமங்கலம் ஊராட்சி வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை, திருவாரூர் கால்நடை பராமரிப்பு துறை கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட் சியரின் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி மற்றும் உதவி இயக்குனர் ஈஸ்வரன் ஆகியோர் ஆலோசனைப்படி, வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் ஆதிச்சமங்கலம் ஊராட்சி வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமினை திருவாரூர் கால்நடை பராமரிப்புத்துறை கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் துவக்கி வைத்து, ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் பரவும் முறைகள், தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
கால்நடை உதவி மருத்துவர் சக்திவேல் மற்றும் உதவியாளர் செந்தில் அடங்கிய மருத்துவ குழு ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம் அனைத்து கிராமங்களிலும் போடப்பட உள்ளது. ஆடு வளப்போர் அனைவரும் நாலு மாத வயதிற்கு குறைவான குட்டிகள் மற்றும் சினை ஆடுகள் நீங்களாக மற்ற அனைத்து வயது ஆடுகளுக்கும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடப்பட்ட ஆடுகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்படும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தத்தம் கிராமங்களில் நடைபெற உள்ள தடுப்பூசி முகாமில் தங்கள் ஆடுகளை அழைத்து வந்து, ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.