மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 வாக்கு எண்ணும் மையம் பாதுகாப்பு குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பு.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா,  தலைமையில் மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன்,மாவட்ட வருவாய் அலுவலர ரெ.சுமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர்
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

திருச்செங்கோடு, இளையம்பாளையம், விவேகானந்தா பெண்கள் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் ஆகும்.
16.நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி, இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளாகம் கைபேசி தடைசெய்யப்பட்ட பகுதியாகவும், அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வளாகம் 3 அடுக்கு பாதுகாப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முதல் அடுக்கு CAPF - மத்திய பாதுகாப்பு படையில் 24 நபர்கள்
இரண்டாம் அடுக்கு - தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் 45 நபர்கள்
மூன்றாம் அடுக்கு – நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையினர் 24 நபர்கள்

என மொத்தம் 93 காவல் துறையினர் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மைய வெளிப்புற பாதுகாப்பு பணியில் நாமக்கல் மாவட்ட காவலர்கள் 53 நபர்கள் [சுழற்சி முறையில்] பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகள் கண்காணிக்க 272 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறையில் 17 தொலைக்காட்சிகள் மூலம் 24×7 அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வேட்பாளர்கள் /அவர்களது முகவர்கள், மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு அறைகளை கண்காணிக்கும் பொருட்டு, முகவர்கள் அறையில் தனியே 6 தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, தற்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளுக்கும், தனித்தனியே CCTV அமைக்கப்பட்டு. தனியே ஒரு தொலைக்காட்சி மூலம் முகவர்கள் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மின்தடைகள் ஏற்படாமல் இருக்க தேவையான அளவு 3 ஜெனரேட்டர்கள் 270 கிலோ வாட் அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வருவாய்த்துறை சார்பில் வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பில் ஒரு வட்டாட்சியர், ஒரு துணை வட்டாட்சியர், ஒரு உதவியாளர் என்ற அடிப்படையில் 24×7 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
 நாள்தோறும் வாக்கு எண்ணும் மையம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நாள் அன்று சுமார் 273 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை 04.06.2024 செவ்வாய் கிழமை காலை 8.00 மணி அளவில் தொடங்கும்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.ந.சிவக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *