தேவர்குளம் – போலீசார் பொதுமக்கள் மோதல்-திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் சமரச கோரிக்கை

தென்காசி, மே – 11

தென்காசி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் பொதுமக்கள் போலீசார் இடையே ஏற்பட்ட தகராறில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சுமூகநிலையை ஏற்படுத்த நடவடிக்கை திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஈ.ராஜா தலைமையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளம் காவல்நிலைய பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர்வருவாய்த் துறை அமைச்சர்
கே.கே.எஸ் எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கார்த்திகேயன்,திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு)மூர்த்தி,திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சிலம்பரசன் ஆகியோரை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்எல்ஏ தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் , தேவர்குளம் காவல் நிலையத்தில் சில அதிகாரிகளால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக காவல் நிலையத்திற்கு வருகின்ற அரசியல்வாதிகள், சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள் மரியாதை குறைவாக நடத்தப்படு கிறார்கள் என தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. சிலர் மீது பொய் வழக்குகள் போடப்பட் டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில் தேவர்குளம் காவல்நிலைய அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து வன்னிக்கோனந்தலில் சில அமைப்புகள் சார்பில் 8ம்தேதி சாலை மறியல் நடந்தது. இதை அமைதியான முறையில் பேச்சுவாரத்தை மூலம் சுமுகமுடிவுக்கு கொண்டு வராமல், வன்மத்தோடு பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்ற பஞ்சாயத்து துணைத்தலைவர் வள்ளிநாயகம் உள்ளிட்ட 58 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

இதை கண்டித்து 9ம்தேதி மானூர், தேவர் குளம், வன்னிக்கோனந் தல், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முழுக்கடை அடைப்பு போராட்டம் நடந்தது. எனவே சங்க ரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல நீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் தேவர்குளம் காவல்நிலைய பிரச்சி னைகளால் அசாதாரண சூழல் நிலவுகிறது.

எனவே இந்த சம்பவத்தில் கைதானவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவர்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்காலிகமாக முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து, மக்களிடம் நல்ல அணுகுமுறை கொண்ட அதிகாரிகளை பணிய மரத்தி அமைதியான நிலையை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது. அவர்களும் இதுபற்றி விசாரணை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா, மதிமுக துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் சுதா இல.பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் இசக்கித்துரை, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கருப்பசாமி பாண்டியன். பார்வர்ட் பிளாக் சார்பில் சுப்பி ரமணியன், ஆதித்தமிழர் பேரவை சார்பில் தென்னரசு. ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆத வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் லிங்கவளவன், புலித்தேவன் மக்கள் கழகம் சார்பில் பெருமாள்சாமி, திமுக மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் திமுக பெரிய துரை, பால்ராஜ், அன்பழ சுன், மதிமுக வேல்சாமி. சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வீமராஜ், பசுபதி பாண்டியன். ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *