தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீராட்சிமங்கலம் கிராமத்தில், பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் 10 பேர் (ஆஷிகா, அஸ்மிதா, திவ்யா,ஜெரோஷா,நிகிதா,கீர்த்தனா, மங்கள கெளரி, றிதி பாஸ் சூசன், சிவசக்தி, சுவீட்டி)கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தாராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வீராட்சிமங்கலம் கிராமத்தில் “பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு” (participatory rural appraisal) செய்துள்ளனர்.இதற்காக அந்த கிராமத்தில் குறுக்கு நடை (transect walk) செய்து அக்கிராமத்தின் வரைபடத்தை ஊர் மக்களிடம் கேட்டறிந்து அதனை வரைந்து விளக்கியுள்ளனர்.
பிறகு ஊர் மக்களின் உதவியுடன் அவர்களின் அன்றாட வாழ்க்கை வேலைகளை வரைபடம்’ மூலம் விளக்கியுள்ளனர். பிறகு அங்குள்ள பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை விளக்கப்படம் போட்டு விளக்கினர்.
அந்த கிராமத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை அதில் முதன்மை தொழிலாளர்கள், விளிம்புநிலை தொழிலாளர்கள், விவசாயிகள் என் பிரித்து காட்டியுள்ளனர்.
மேலும் அங்கு விளைவிக்கும் பயிர்களின் உற்பத்தி சதவீதம் பின்பு பயிர்கால அட்டவணை மற்றும் அவ்வூரின் காலக்கோடு என அனைத்தையும் ஊர் மக்களின் உதவியுடனும் VAO அலுவகம்/ panchayat அலுவலகம் உதவியுடனும் விபரம் கேட்டறிந்து பின்பு அதனை ஊர் மக்களின் முன்பு வரைந்து காட்டியுள்ளனர்.