இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் திருநெல்வேலி தூத்துக்குடி பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துபாய் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்று நடித்து வந்தார் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக துபாயில் இருந்து சென்னை வந்தார் தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றியபோது அவரது இடது கையில் காயம் ஏற்பட்டு இருந்ததை தொலைக்காட்சிகளில் வைரலாக பரவியது இந்த நிலையில் நடிகர் விஜய் ஓய்வு எடுத்த பின்பு அடுத்த கட்ட படப்பிடிப்பு கலந்து கொள்வதற்காக 15 பேர் கொண்ட குழு உடன் நடிகர் விஜய் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நடிகர் விஜய் செல்லும் பொழுது ரசிகர்கள் அவர் செல்வதை கண்டவுடன் விஜய் சார் விஜய் அண்ணா என்று கோஷம் எழுப்பினார்கள் ரசிகைகள் விஜய் அண்ணா விஜய் அண்ணா என்று கோஷம் எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது மேலும் விமான நிலைய நுழைவாயில் உள்ளே செல்லும் பொழுது வரிசையில் நின்று சென்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் விஜய் விஜய் அண்ணா விஜய் அண்ணா கூப்பிட்ட ரசிகை வர்மிளா கூறியதாவது நடிகர் விஜய்யை காண வேண்டும் ஆசை சென்னை விமான நிலையத்தில் பூர்த்தி ஆனது என்றும் அவரை கண்டது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் கட்சி தொடங்கியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் எங்கள் ஆதரவு அவருக்கு தான் என்றும் தெரிவித்தார் மேலும் அவரை கூப்பிடும் பொழுது அவர் திரும்பி அசதி இருந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.