கோவை மாவட்டம்
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வில்லோனி எஸ்டேட் அருகே உள்ள நெடுங்குன்று செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதி சேர்ந்த ரவி என்பவரை எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கி கடந்த 8 ஆம் தேதியன்று உயிர் இழந்ததை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி துணை இயக்குநர், (கூடுதல் பொறுப்பு) தேவேந்திர குமார் மீனா நெடுங்குன்று செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு சென்று காட்டு யானை தாக்கி உயிர் இழந்த ரவி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

அதைத்தொடர்ந்து நெடுங்குன்று செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் தேவையான அத்யாவிசிய தேவைகளான சாலை வசதி, வீட்டு மேற்கூரை , சோலார் வேலி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் அரசு திட்டத்தின் கீழ் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் விரைவில் செய்து கொடுக்க அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உருதியளித்தார்

இந்நிகழ்வின் போது வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வனப்பணியாளர்களும் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *