காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல்
திறப்பு விழா நடைபெற்றது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறப்பு விழாவினை திமுக கழகத்தினர் திறந்து வைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆலோசனைபடி அச்சிறுபாக்கம் பேரூராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பொது குழு உருப்பினர் எஸ்.உசேன் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இதில் பொதுமக்களுக்கு கேழ்வரகு கூழ், தர்பூசணி,
இளநீர், நீர் மோர், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, பழ வகைகள்,மற்றும் குளிர்பான வகைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர்
வி.டி.ஆர்.வி.எழிலரசன், மாவட்ட பிரதிநிதி சித்தார்த்தர்,அவைத் தலைவர் எ.சையது முகமது, பேரூர் துணை செயலாளர்கள் ப.ஆனந்தகண்ணன், கே.கபாலி வர்த்தகஅணி மாவட்ட துணை செயலாளர் எஸ்.அப்துல் ரசாக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.யுவராஜ்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் து.சுரேஷ்,மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் எஸ்.விஸ்வநாதன்,
ஒன்றிய பிரதிநிதி சீதாலட்சுமி,அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி கவுன்சிலர்கள் அகிலா செல்வம்,
மணிகண்டன், மோகனகிருஷ்ணன், சிவசங்கர், கிளைச் செயலாளர் எஸ்.அசேன், அழகிரி, எஸ்.மஸ்தான், ரகுபதி, கஜேந்திரன், உட்பட பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள்
என பலர் கலந்து கொண்டனர்.