பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி செட்டிகுளம் அரசு மருத்துவமனை சார்பாக கடைவீதி பகுதியில் பொதுமக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் பானம் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த ஏற்பாடு பொதுமக்களை வெகுவாக கவர்ந்ததோடு மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.கோடை காலம் முடியும் வரை தினந்தோறும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடதக்கது.