செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய புதுப்பட்டினம் ஊராட்சி கழகம் சார்பில் கழக பொதுசெயலாளரும், முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுப்பட்டினம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவரும் , ஒன்றிய மகளிரணி தலைவியுமான டாக்டர் காயத்ரி தனபால் ஏற்பாட்டில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம் தனபால் தலைமையில் நடைபெற்றது,
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ராஜசேகர், மாவட்ட கழக துணை செயலாளர் பி.ஏ.எஸ்வந்த் ராவ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆணூர் பக்தவச்சலம், மாவட்ட மீனவரணி செயலாளர் கவிஞர் கா.கலியபெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ் அலி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜி.கே .பாபு, ஒன்றிய செயலாளர்கள் விஜயரங்கன், மாமல்லபுரம் ஜி ராகவன், ரைஸ்மில் செல்வம் செம்பூர் வேலு, சுரேஷ், நகர செயலாளர் தினேஷ் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கழக மகளிரணி தலைவியும் – முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி சிறப்பாளராக கலந்து கொண்டார். முதலாவதாக பல்லவன் நகர் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் எழுந்தருளியுள்ள
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து புதுப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவம் பதித்த 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கும், தொன்டர்களுக்கும் வழங்கியதுடன் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலையுடன், ஆட்டோ ஓட்டுனர்கள் 300 பேருக்கு சீறுடைகளை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
இதில் மாவட்ட ஒன்றிய நகர கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.