காரைக்குடி அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் கோவில் செவ்வாய் திருவிழா தேரோட்டம் இன்று துவங்கி நடைபெற்றது.
நாளைக்கு அதாவது மே.15 காலை தேர் நிலைக்கு வரும்.
காரைக்குடி நகரின் காவல் தெய்வமாக திகழ்ந்து வருவது அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் கோவில்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் செவ்வாய் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது திருவிழாவை முன்னிட்டு அம்மன் தினமும் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
திருவிழாவில் முக்கிய அம்சமான தேரோட்டம் நாளை (செவ்வாய்) மாலையில் நடைபெறுகிறதுஇன்று அதிகாலையில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சியளித்தார்.
அவருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பால்குடம், மதுகுடம், முளைப்பாரி எடுத்து வரும் பக்தர்கள் தேரைச் சுற்றி வந்து வழிபாடு நடத்துவார்கள்.
மாலை 6.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்குகிறது.
முக்கிய வீதியில் வழியாக நடைபெறும் தேரோட்டம் இரவில் காட்டம்மன் கோவிலை சென்றடைகிறது. தேர் முழு இரவு அங்கேயே தங்கிவிடும்
பின்னர் அங்கிருந்து புறப்படும் தேர் மறுநாள் காலையில் மீண்டும் கோவிலை வந்து அடைகிறது.
அதைத்தொடர்ந்து 16 ஆம் தேதி இரவு 11 மணிக்கு கோவில் தெப்பக்குளத்தில் மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்ப தேரில் அம்மன் எழுந்தருள தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 17 ஆம் தேதி காலை பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழா
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் ஞானசேகரன், சங்கர் (கூடுதல் பொறுப்பு) ஆகியோர் தலைமையில் கோயில் செயல் அலுவலர் மகேந்திர பூபதி மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.