சின்னமனூர் அருகே மேகமலை தேயிலைத் தோட்ட பகுதிகளில் காட்டு மாடுகள் உலா எஸ்டேட் தொழிலாளிகள் அச்சம் தேனி மாவட்டம் சின்னமனூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது மேகமலை இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டு மாடுகள் அதிகளவில் சுற்றி வருகின்றன மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேஸ் பேரூராட்சியில் மேல் மண லார் மண லார் வெண்ணியாறு இரவங்கலார்
மகாராஜா மெட்டு உள்பட 7.மலை கிராமங்கள் உள்ளன.
இந்த மலை கிராமங்களில் அதிக அளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்பொழுது கொளுத்தி வரும் கோடை வெயிலாலும் வனப்பகுதியில் காணப்படும் கடும் வறட்சியால் வனவிலங்குகள் தண்ணீர் உணவு தேடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு உலா வருகின்றன. இதன்படி ஹைவேவிஸ் மலைத் தோட்ட கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதனால் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அச்சத்துடனே வேலை செய்து வருகின்றனர்.
எனவே மலைக்கிராம தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு மாடுகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்