கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி தமிழில் 100க்கு 100 எடுத்து வரலாற்று சாதனை தேனி மாவட்டம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவி சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழில் 100க்கு 100. மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
சி பி எஸ் சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது இதில் கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஸ்ரீ சஞ்சுகி மது 500 க்கு 454 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
இதில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் உத்தமபாளையம் அருகே உள்ள பாலர் பட்டியை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி விவசாயியான இவரின் மகள் தான் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் சாதனை படைத்த மாணவியை பள்ளி தலைவர் ஆர் ஆர் ராஜாங்கம் செயல் தலைவர் ஆர் ஆர் ஜெகதீஷ் துணைத் தலைவர் ஆர் அசோக் குமார் பள்ளி முதல்வர் ஆனந்தவல்லி மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினார்கள்.
இதேபோல் பாலர் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விவசாயின் மகளான மாணவிக்கு மனமார்ந்த பாராட்டை தெரிவித்தார்கள்