காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மகாத்மா காந்தி நகரில் வசித்து வருபவர்
சரண்யா வ/30. இவரது கணவர் ராஜ்மோகன் கத்தார் நாட்டில் வசித்து வேலை செய்து வருகிறார். சரண்யா சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் ராஜ்மோகன் வெளிநாட்டிலிருந்து குடும்பத்தினரை பார்ப்பதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி மாலை ராஜ்மோகன் வெளிநாட்டிற்கு புறப்பட்டு செல்வதற்கு முன் தன் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி மற்றும் 6 கிராம் மோதிரம் இரண்டையும் கழட்டி மனைவி சரண்யாவிடம் கொடுத்துள்ளார். சரண்யாவும் வீட்டின் பீரோவில் வைத்து பீரோவை பூட்டிவிட்டு சாவியை பீரோவின் சாவி போடும் துளையிலேயே வைத்துள்ளார்.
பின்னர் கடந்த மாதம் 9 ஆம் தேதி காலையில் சரண்யா பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த தினேஷ்குமார்/20, ஸ்ரீபெரும்புதூர் செக்கடி தெருவை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் வ/23 ஆகியோர் நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தினேஷ் குமார் மற்றும் மொய்தீன் அப்துல் காதர் ஆகிய இருவரையும் கைது அவர்களிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.