பொட்டலூரணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்ற காவல்துறை உத்தரவு கிராம மக்கள் எதிர்ப்பு
பொட்டலூரனி கிராமத்தில் செயல்பட்டு வரும் மூன்று மீன் கம்பெனிகளை மூட வேண்டும் என்று கூறி கிராம மக்கள் பல வருடங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தனர் இந்த நிலையில் கிராமத்தில் பந்தல் அமைக்கப்பட்டு மீன் கம்பெனி எதிர்ப்பு போராட்டக் குழு என்று ஒரு பிளக்ஸ் பேனர்.
அதுபோல போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை கண்டித்து மற்றொரு பிளக்ஸ் பேனரும் கட்டப்பட்டுள்ளது இதனை அடுத்து புதுக்கோட்டை காவல் துறையினர் பிளக்ஸ் பேனரை அகற்ற வேண்டும் என்று கூறினார் அதற்கு ஊர் பொதுமக்கள் அகற்ற முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்
அதற்கு காவல்துறையினர் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்று கூறினார் ஆனால் கிராம மக்கள் அகற்ற முடியாது என்று கூறினார் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது