திருப்பூர் தாராபுரம் சாலை கோட்டை மாரியம்மன் கோவில் சிக்னல் அருகில் அமைக்கப்பட்டிருந்த
தற்காலிக பச்சை நிற நிழற்கூரை பந்தல் சூறாவளி காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிப்பு.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வரும் நாட்களில் இன்னும் கோடை வெயில் தாக்கம் அதிக அளவு இருக்கும் என்பதால்
அக்னி நட்சத்திரம் நடைபெறும் நிலையில்
கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரக்கூடிய நிலையில் புதுச்சேரியில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டி களுக்காக பச்சை நிற மேற்கூரை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அதை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் கடந்த வாரம் பச்சை நிற மேற் கூரை பந்தல் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து அவிநாசி சாலையில் உள்ள எஸ் ஏ பி தியேட்டர் சிக்னல் அருகிலும்,தாராபுரம் சாலையில் கோட்டை மாரியம்மன் கோவில் சிக்னல் அருகிலும்
மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பச்சை நிற மேற்கூரை பந்தல் அமைக்கப்பட்டது
இதனால் சிக்னலில் இரண்டு நிமிடம் வரை காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கோடை வெயில் காலையில் வாட்டிய நிலையில்,மாலை நேரத்தில் திடீரென வானில் கரு மேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசியது.குறிப்பாக தாராபுரம் சாலையில் கோட்டை மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள சிக்னல் அமைக்கப்பட்டிருந்த பச்சை நிற மேற்கூரை பந்தல் சூறாவளி காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது,நல் வாய்ப்பாக வாகன ஓட்டிகள் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதுசாலையில் முறிந்து கிடந்த பச்சை நிற மேற்கூரை பந்தலை போக்குவரத்து போலீசார் துரித கதியில் செயல்பட்டு உடனடியாக அப்புறப்படுத்தினர் இதன் காரணமாக திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வழி பேருந்து நிலையம், தாராபுரம், மதுரை செல்லும் கரைக வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இவைகள் உடனடியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக மேற்கூரை பந்தல் அமைக்கப்பட்ட நிலையில் திடீரென அடித்த சூறாவளி காற்றினால் மேற்கூரை பந்தல் முறிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.