வாரணாசி தொகுதியில் தென்காசி அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த நரேந்திரமோடி
தென்காசி
உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சார்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் ஐஏஎஸ் யிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார் . அப்போது அவரிடம் வேட்புமனுவை பெற்ற தேர்தல் அதிகாரி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜலிங்கம் ஆவார்.
வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவை வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் தென்காசி மாவட்டம், கடைய நல்லூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர், திருச்சி தேசிய தொழில்நுட் பக் கல்லூரியில் வேதிப் பொறியியலில் பட்டம் பெற்றவர்.
2006-இல் முதல் முறையாக குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற ராஜலிங்கம், உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் 2009-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.
குஷிநகர் ஆட்சியராக ராஜலிங்கம் பணியாற்றியபோது, அந்த மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை விரைவாக நிறைவேற்றியதைப் பாராட்டும் வகையில், சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, ராஜலிங்கத்தின் தோளில் தட்டிப் பாராட்டினார்.
அதனைத்தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மாவட்ட ஆட்சியராக ராஜலிங்கம் நியமிக்கப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் சுகாதார தரவரிசை மாவட்டங்கள் பட்டி யலில் வாரணாசியை முதல் இடத்திற்கு கொண்டு வந்தவர் என்ற பெருமை பெற்றவர்.
சுல்தான்பூர் ஆட்சியராக ராஜலிங்கம் இருந்தபோது நடைபாதைகளில் 50 ஆண்டுகளாக எந்த அடையாளமும் இன்றி வாழ்ந்த குடும்பங்களுக்கு அவர் செய்த உதவி குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சார்ந்த ஒரு தமிழர் மாவட்ட ஆட்சியராக வட மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றி பெருமை சேர்த்தமைக்கு தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.