ஆலங்குளம் இந்தியன் ஸ்போர்ட்ஸ் சார்பில் கிரிக்கெட் போட்டி;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டை மையதனத்தில் வைத்து இந்தியன் ஸ்போர்ட்ஸ் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டி கடந்த 17-3-2024 ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் வழக்கறிஞர் ராஜா தலைமை தாங்கினார் இந்தியன் ஸ்போர்ட்ஸ் நிருவாகி கண்ணன் வரவேற்றனர்.
காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ராஜா சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
நடைப்பெற்ற கிரிக்கெட் இறுதிப் போட்டியில் குருவன்கோட்டை ஏ. கே ஸ்போர்ட்ஸ் அணி முதல் பரிசை வென்று ரூ. 10.000 ஆயிரம் கோப்பையும்.
2வது பரிசு நாலான்கட்டளை என் கே. ஐ ஸ்போர்ட்ஸ் அணிக்கு பரிசு ரூ 8000 ஆயிரம்.கோப்பையும்மூன்றாவது கே பி ஆர் பிரதர்ஸ் அணிக்கு பரிசு ரூ. 6000 ஆயிரம் கோப்பையும் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து நான்காவது வெள்ளை பனை யேறிபட்டி அணிக்கும். 5,6,7, அரியபுரம், குமாரசாமிபுரம், 8,9,10,11,12 ம் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசு வழங்கப்பட்டது.
இப்போட்டியில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.