தருமபுரிமாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி கல்லூரி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருவதால் பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவது மட்டுமின்றி செவி திறன் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள்,லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் மற்றும் பல ஒளிவிளக்குகள் பொருத்தி வருகின்றனர். ஏர் ஹாரன் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு விதிகளுக்கு புறம்பாகவும் அதேபோல் எதிரில் வரும் வாகன ஓட்டுநர் மற்றும் சாலையில் செல்வோரின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அதிக ஒளி வெளியிடும் முகப்பு விளக்குகள்
வாகனங்களில் பயன்படுத்தி இயக்கப்படுவது தெரிந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.