தென்காசி, மே – 18

உலக சுகாதார அமைப்பின் சார்பாக 2006-ம் ஆண்டு முதல் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்கள் அறிவுறுத்தலின் படியும், பொது மருத்துவத்துறை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவருமான டாக்டர் முகமது ரபி அவர்களின் வழிகாட்டுதலின் படியும், இரத்த அழுத்த விழிப்புணர்வு நலக்கல்வி நிகழ்ச்சி மருத்துவமனை உள் வளாகத்தில்,
உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்கள் அறிவுறுத்தலின் படியும், பொது மருத்துவத்துறை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவருமான டாக்டர் முகமது ரபி வழிகாட்டுதலின் படியும், இரத்த அழுத்த விழிப்புணர்வு நலக்கல்வி நிகழ்ச்சி மருத்துவமனை உள் வளாகத்தில், செவிலியர் பயிற்றுநர் செல்வன் தலைமையில் பொது மக்கள்கூடும் இடங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், 2024 ஆம் ஆண்டுக்கான உலக இரத்த அழுத்த கருப்பொருளான,”உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடவும், கட்டுப்படுத்தவும், நீண்ட காலம் வாழவும் “, என்கிற தலைப்பில் நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் , பொதுமக்களிடம் கூறியதாவது, உலகளவில் அகால மரணங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும், மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்ப்பதன் மூலமும், மன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ்வதன் மூலமும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். எளிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடை பராமரிப்பு, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சீரான உணவு ஆகியவை இரத்த அழுத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். அமைதியான கொலையாளி’ என்று அழைக்கப்படும் இது இதயம் தொடர்பான பல நோய்களுக்கு முக்கிய காரணமாகும்.
யோகா, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. மனதிற்குப் பிடித்த பாடல்கள் கேட்பது சிறந்தது. ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். மேலும், பேக்கரி பொருள்கள், சிப்ஸ்,பிரெட் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய் போன்ற உணவுப் பொருள்களளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைத்து உடல் நலம் பேண வேண்டும். எனவே ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொண்டு உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *