தமிழீழ இனப்படுகொலை நாளான மே-18 ஆம் தேதியான இன்று பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, குருதிக்கொடை பாசறை மாநில துணைத் தலைவர் மலர்மாணிக்கம் மற்றும் குருதிக்கொடை பாசறை மாவட்ட செயலாளர் விஜய் ஆகியோர் ஒருங்கிணைப்பில் ,மண்டலச் செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில், பெரம்பலூர் 4-வழிச்சாலையில் அமைந்துள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்டபொறுப்பாளர்களான ஹமர்தீன்,பாலகுரு,கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்தம் வழங்கியவர்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் விஜய் மரக்கன்றுகள் மரக்கன்றுகள் வழங்கினார்.