பசும்பொன் தா.கிருட்டிணன் அவர்களின் 21-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அமைச்சர் பெரியகருப்பன் மலர்வளையம் வைத்து மரியாதை
திராவிடத்தென்றல் பசும்பொன் தாகியார் அவர்களின் 21-ம் ஆண்டு நினைவுநாள் அமைதிப் பேரணி சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுக்காவில் உள்ள கொம்புக்காரனேந்தல் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு அன்னாரின் நினைவிடத்தில் காலை 7.00 மணியளவில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், தா.கிருஷ்ணன் அவர்களின் தம்பி ராமையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்
.