திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சி.குமாரபாளையம்
பகுதியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தைக் கண்டுரசித்தனர்.

திமுக திருப்பூர் தெற்கு மாவட்டம், தாராபுரம் ஒன்றியம். சின்னக்காம்பாளையம் பேரூர் திமுக சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கொட்டமுத்தாம்பாளையம் அருள்மிகு கௌமாரியம்மன் திருவிழாவை யொட்டியும் உழவன் ரேக்ளா குழுமம் சார்பில் 11-ஆம் ஆண்டு
ரேக்ளா.பந்தயம் நாயினார் சந்திராபுரம். சாலையில் நடைபெற்றது.

இதில்கொங்கு இளைஞர்களின் வீரத்தை காட்டும் வகையிலும் நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாத்தல், அவற்றை வளர்க்க வேண்டிய அவசியம் மற்றும் விவசாயத்தில் இயற்கை உரப்பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தல் ஆகியவற்றுக்காக, 11, ஆண்டாக உழவன் ரேக்ளா குழுமம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்திற்கு தாராபுரம் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மயிலை, காரி, செவலை, மலையன், காங்கயன் இனக் காளைகள் பூட்டப்பட்ட 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. 200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ரேக்ளா போட்டியைக்காண, நைனார்சத்திரம்
சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், போட்டியில் பங்கேற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

இதுகுறித்து ரேக்ளா போட்டி விழாக் குழுவைச் சேர்ந்த ஆர்.பன்னீர் செல்வம் கூறியதாவது:

அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் போட்டி நடத்தப்பட்டது.

இரண்டு பல், நான்கு பல் உள்ள காளைகள் குறைந்த தூரமும், நான்கு பல்லுக்கு மேல் உள்ள காளைகள் அதைவிட சற்று அதிக தூரமும் ஓட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டிகளில் வென்ற ரேக்ளா வண்டி உரிமையாளர்களுக்கு கோப்பை,பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் தமிழக அரசே ரேக்ளா போட்டிகளை நடத்த வேண்டும் என்பதே
உழவன் ரேக்ளா குழுமம் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இறுதியாக இதில் பங்கேற்ற ரேக்ளா மாட்டுவண்டி உரிமையாளருக்கு முதல் ஒன்று இரண்டு மூன்று ரேக்ளா மாடு உரிமையாளர்களுக்கு தங்க நாணயமும் கோப்பையும் வழங்கப்பட்டன மேலும் 4,5 முதல் 10 ரேக்ளா மாட்டு உரிமையாளர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *