முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் ஆ. ரெங்கசாமி தலைமையில் ராஜபாளையம் ஒன்றியம் தேவதானத்தில் அன்னாரது உருவச் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் லட்சுமணன், தேவதானம் காங்கிரஸ் கமிட்டி தளவாய் பாண்டியன், தலைமலை, மாவட்ட செயலாளர் காளிராஜ், முன்னாள் தலைவர் கணேசன், சேவா தளம் பச்சையாத்தான், கர்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.