கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சட்டமன்ற உறுப்பினர் M.R.R.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் அமைதி ஊர்வலம் விருத்தாச்சலம் நகராட்சி தெருவில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து உருதி மொழி ஏற்றனர்.
இதில் நகர செயலாளர் ரஞ்சித் மற்றும் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.