வலங்கைமான் அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில், தமிழ் சேவா சங்கம் சார்பாக ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் ஆலய சுற்றுச்சுவர், அலுவலகம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து ஆலய பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட அங்காளம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ் சேவா சங்கம் சார்பாக சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆலய சுற்றுச்சுவர், அலுவலகம் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறைஆகியவற்றுக்கான கட்டிடங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து ஆலய பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலய அறங்காவலர் சண்முகவேல் தலைமையில், தமிழ் சேவா சங்க நிறுவனர் ஞான சரவணவேல், தமிழ் சேவா சங்க அறங்காவலர் ஞான கந்தவேல்,ஆலய நிர்வாக குழு உறுப்பினர் சுவாமிநாதன் கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணமூர்த்தி, பா. சிவனேசன்,வேணு பாஸ்கரன்,மாரிமுத்து, அப்பு, சத்யா மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.