காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் உற்சவம் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாள்.

அதிகாலையிலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் காலை மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் காட்சியளித்து வருகிறார்.

மூன்றாம் நாள் காலை உற்சவமான இன்று பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் இன்று அதிகாலை 4 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டது.

வரதராஜ பெருமாள் நீல நிற பட்டுடுத்தி திருவாபரங்கள் அணிந்து தங்க கருட வாகனத்தில் கோவில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவிலில் இருந்து இருந்து புறப்பட்டு செட்டி தெரு, ரங்கசாமி குளம், கீரை மண்டபம், பிள்ளையார்பாளையம், நான்கு ராஜ வீதி, பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம், போன்ற மாநகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கருட சேவை உற்சவத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் மாவட்ட காவல் துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 5 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *