பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம் ரயில்வே – நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
தென்காசி, மே – 22.
தென்காசி மாவட்டம்
பாவூர்சத்திரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்துவரும் நிலையில் இதை விரைவில் முடிப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பு பணி கடந்த இரு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக, தண்டவாளப் பகுதிக்கு மேலே அமைய இருக்கும் மேம்பால பகு திக்கான வரைபடம் இறுதி செய்யப்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித் தது. அத்துடன் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையில் செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத் துத் தரப்பினரும், ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்காவிட் டால் ரயில் மறியல் உள் ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை ரயில்வே கோட்ட துணைப் பொறியாளர் ராதாகிருஷ்ணள், தென்காசி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெகன்
மோகன்,துணை பொறியாளர் கஸ்தூரி ராணி, உதவிப் பொறியாளர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா உள்ளிட் டோர் பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்
பாவூர்சத்திரம் ரயில்வே தண்டவாளத்திற்கு மேலே 30மீ அக லத்தில் அமையவுள்ள இடத்தை அளவிட்டு ஆய்வுசெய்தனர்.
மேலும் ரயில்வே சுரங்கப்பாதை. மழை நீர் கால்வாய் அமையும் இடத்தையும் பார்வை யிட்டனர். ஏற்கனவே அமைக்கப் பட்ட பாலத்தை, தண்டவாளத்துக்கு மேலே அமையவுள்ள பாலத்துடன் இணைப்பது குறித்து பாலத்தின் மீது ஏறி பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து ரயில்வே வரைபடங்களை வைத்து ஆலோசித்த அதிகாரிகள் உடனடியாக ஒப்புதல் .வழங்குவது குறித்து விவாதித்தனர்.
பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணி கள் விரைவில் முடியும் பட்சத்தில் நெல்லை தென் காசி பயண நேரம் 30 நிமி டம் குறைய வாய்ப்புள்ளது. எனவே ரயில்வேத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம் பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த திங்கட் கிழமை கலெக்டர் தலைமையில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.