திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் அருள்மிகு சுந்தரநாயகி அம்பாள் உடனுறை ஆதிபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அண்மையில் இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த 2சவரன் தாலி பொட்டு, உண்டியல் பணம் ரூ.10000திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு நடைபெற்ற கொள்ளை சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.