ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் மௌன அஞ்சலி ஊர்வலம்.!

முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் மௌன அஞ்சலி ஊர்வலம் இன்று 21/05/2024 காலை 10:30 மணி அளவில் ஈரோடு காவேரி சாலையில் உள்ள கிருஷ்ணா தியேட்டர் முன்பிருந்து ஊர்வலம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஊர்வலம் துவங்கி கருங்கல்பாளையம் மகாத்மா காந்தி சிலை முன்பு மௌன ஊர்வலம் நிறைவு பெற்ற பின் அமரர் ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் டி. திருச்செல்வம் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன் துணை தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்களான ஆர் விஜயபாஸ்கர்,எச்.எம். ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஓபிசி தலைவர் சூர்யா சித்திக் பயங்கரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எ மாரியப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் எம். ஜவஹர் அலி, முன்னாள் வட்டார தலைவர் காலிங்கராயன் பாளையம் எம் செல்வராஜ், மாவட்ட துணை தலைவர்களான கே புனிதன், அம்மன் மாதேஷ், பாபு என்கிற வெங்கடாஜலம், வழக்கறிஞர் சி. பாஸ்கர்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்களான இரா.கனகராஜன், ஏசி சாகுல் அமீத், மாமரத்து பாளையம் கோபி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம்.ஜூபைர் அகமது,துணைத்தலைவர் கே என் பாஷா,இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சித்தோடு பிரபு, காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் எஸ் முகமது யூசுப், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி எம் தீபா, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சி மாரிமுத்து,ஈரோடு மாவட்ட எஸ் சி பிரிவு தலைவர் சிந்தன் நகர் குருசாமி, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டிசிடியு) மாநிலத் துணைத் தலைவர் குளம் எம் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகளான குப்பண்ணா சந்துரு, கே ஜே டிட்டோ, முன்னாள் எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் கே பி சின்னசாமி, சிந்தன் நகர் கிருஷ்ணமூர்த்தி, சூரம்பட்டி விஜயகுமார்,பி பெ அக்ரஹாரம் முத்து அப்துல் காதர்,காங்கிரஸ் மூத்த முன்னோடிகளான நூர்தீன், புதுமைகாலனி ஈ எம் சிராஜுதீன், ராஜாஜிபுரம் சிவா, குமரேசன், நடராஜ் செட்டியார், கனிராவுதர் குளம் சபீர் அகமது,வள்ளிபுரத்தாம் பாளையம் எஸ் தங்கவேல், ஈரோடு மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிட்டி கல்கி, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளான சாந்தி,கோமதி, சோபியா, சரோஜினி, பிரபா தேன்மொழி, ஜெனிபர்,குணசேகரி மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *