பெரம்பலூர் : சத்திரமனை செல்லியம்மன் கோவில் தேர்த்திருவிழா
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவிற்க்குட்பட்ட சத்திரமனை கிராமத்தில் எழுந்தருளியுள்ள நல்ல செல்லியம்மன் கோவில் தேர்த்திருவிழாவானது மே -22ஆம் தேதியான காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். கேரளா செண்டை மேளம் முழங்க தேர்வீதி உலா நடைபெற்றது.