தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் உயர்வு இல்லத்தரசிகள் அதிர்ச்சி தேனி மாவட்டம் கம்பம் சின்னமனூர் உத்தமபாளையம் பெரியகுளம் ஆண்டிபட்டி மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகி வருகின்றன மேலும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைவாக வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்பொழுது கிலோ 40 முதல் 50 வரை விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது
மேலும் இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறும்போது தக்காளி விலை உயர்வு என்பது தக்காளியை வியாபாரிகள் மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதால் தக்காளி விலை கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது
இதனை வேளாண்மை துறை அதிகாரிகள் கண்காணித்து தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்