திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து உபசரிப்பு பாராட்டு விழா

திருவாரூர் மே 26. திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் ஆரூரின் சிறப்பு ஆழித்தேர் மற்றும் தெப்பத் திருவிழா நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய திருவாரூர் நகரத்தில் தூய்மை பணி செய்த நகராட்சி பணியாளர்களுக்கு அசைவ விருந்து உபசரிப்பு மற்றும் பாராட்டு விழா நகருக்கு உட்பட்ட தெற்கு வீதியில் அமைந்துள்ள ஏ கே எம் திருமண அரங்கில் நடைபெற்றது
நிகழ்விற்கு நிறுவனத் தலைவர் வி. எம். அண்ணாதுரை தலைமை வகித்தார் செயலாளர் பி .கார்த்திக் ராஜா பொருளாளர் என்டி. இளங்கோ செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்நாதன் பொறியாளர் செல்வதுரை சுவாமிநாதன் மற்றும் ராம்ஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் கே டி ஆர் கோபாலகிருஷ்ணன் திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் மோகன் திருவாரூர் நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் விகேஎஸ் .அருள் புலவர் சந்திரசேகர் நகர மன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்துரை வழங்கி நன்றி தெரிவித்து பாராட்டி பேசினார்கள்
சுமார் 200க்கும் மேற்பட்ட. தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவுடன் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும. அத்தியாவசிய. பொருள்களான குளியல் சோப் மற்றும் வாஷிங் சோப் கையுறை உள்ளிட்ட பொருட்களை வழங்கி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்
நிகழ்வின்போது ஈர உள்ளம் அமைப்பின் உறுப்பினர்கள் மருத்துவர் ஏ கே எம் செந்தில் அன்வர் ஸ்கேன் மருத்துவர் அன்வர் சதாத் பி கே எம் செந்தில்குமார் ராமதுரை ராஜ நாராயணன் கோபிநாத் சிங்காரவேல் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானூர் பங்கேற்றனர்