திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை 10 மணி அளவில்
21.கீழ சன்னதி தெரு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் செயல் தலைவர் S. முத்தையன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்திற்கு சங்கத்தின் னுடைய துணை தலைவர் M. ஈஸ்வரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் னுடைய பொதுச்செயலாளர் R. குழந்தைவேலு சிறப்புரை ஆற்றினார்.
சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் ரங்கதுரை அவர்களுடைய தகப்பனார் முருகன் மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நமது சங்க உறுப்பினர் M ரமேஷ் இல்ல திருமண விழாவிற்கு சென்று வழக்கம்போல் அன்பளிப்பு வாழ்த்து மடல் வழங்கி சிறப்பித்ததற்கு கூட்டம் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் சலவைத் துறையில் நீர்த்தேக்க தொட்டி அமைத்ததில் முன்னின்று சிறப்பாக செய்த நிர்வாகிகளுக்கு சங்கம் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் னுடைய துணைச் செயலாளர்
P. செல்வராஜ் V. சுப்பிரமணியன் V. செந்தில் குமார் P.முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் உயர்மட்ட செயற்குழு. செயற்குழு. பொதுக்குழு. மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிறைவாக சங்கத்தின் பொருளாளர் J. நடராஜன் கணக்கு வரவு செலவு தாக்கல் செய்து அவரது நன்றியுரை கூட்டம் இனிதே நிறைவுற்றது