கம்பம் நகரில் நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளை வெட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அவலம் நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆசிர்வாதத்துடன் நடைபெறும் தேனி மாவட்டம் கம்பம் நகர் 33 வார்டுகளை கொண்டது
இந்நகரில் இறைச்சி அதிகம் விற்பனை செய்யும் இடமாக ஓடைக் கரை தெரு புது பள்ளிவாசல் மார்க்கெட் தெரு சுருளிப்பட்டி செல்லும் சாலை பாரதியார் நகர் என நகரின் பிரதான வீதிகளில் ஆடு அறுத்து விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது
இந்தக் கடைகளில் விற்கப்படும் ஆடுகள் நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டியில் முறையாக சென்று அந்த ஆட்டுக்கு நகராட்சியின் அனுமதி வாங்க வேண்டும் என்பது விதி ஆனால் எந்த ஒரு நகராட்சி அனுமதி இல்லாமல் நோய் ஏற்பட்ட ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
இதை வாங்கி சாப்பிடும் பொது மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது மட்டுமில்லாமல் அதிகாலை நேரங்களில் ஆடை ஆடு விற்கும் கடை முன் அறுத்து விற்பனை செய்யும் போது அந்த ஆட்டின் உயிர் போகும் போது அதனுடைய கதறல் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பதற வைக்கிறது
இதனால் அதிகாலையில் நகர மக்கள் ஒரு வித பதட்டத்துடன் செல்லும் நிலை உள்ளது. ஒரு ஆடு பொதுமக்களுக்கு அறுத்து விற்பனை செய்யும் போது அந்த ஆடு நோய் நொடி இல்லாத ஆடா என்பதை சோதிப்பதற்கு தான் தமிழக அரசு பல லட்ச ரூபாயில் ஒவ்வொரு நகராட்சிக்கும் ஆடு அடிக்கும் தொட்டி அமைத்து அதற்கு அரசு சார்பில் பணியாளர்களை நியமித்து அந்த ஆடை பரிசோதித்து மக்களுக்கு விற்பனை செய்யலாம் என நகராட்சி முத்திரை வழங்கிய பிறகு தான் ஆடுகள் பொதுமக்களுக்கு விற்க வேண்டும் என்பது தமிழக அரசின் சட்ட விதி ஆனால் இந்த விதிமுறைகளை எந்த ஆடு அறுத்து விற்பனை செய்யும் கடைகளில் கடைப்பிடிப்பதில்லை
மேலும் அதிகாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மெயின் ரோட்டில் ஆடுகளை அறுப்பதால் அதன் உயிர் போகும் போது பதறும் சத்தம் அப்பகுதி வழியாகச் செல்லும் பொது மக்களின் உள்ளம் பதறுகிறது
மேலும் நோய் பாதித்த ஆடுகளை அறுத்து பொது மக்களுக்கு விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது எனவே நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் உத்தரவின் படி நகராட்சி சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆடு அடித்து விற்பனை செய்யும் கடைகளை சோதனை செய்து நகர மக்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது