தென்காசி மாவட்டம் புதுப்பட்டி ஊராட்சி,
காசிநாதபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி
யில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 96%
தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாரட்டு விழா
காசி நாதபுரத்தில் வெகு விமர்சியாக
நடைப்பெற்றது.
இதில் மாணவிகள் பத்மா 500 /436/ மதிப் பெண்கள் பெற்று முதல் இடத்திலும் எஸ்.விமலா 500 / 421 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்
ஜெ.வாசுகி 500/ 407 மதிப்பெண்கள் பெற்று முன்றவது இடத்தை பிடித்து பள்ளிக்கும் காசிநாதபுரம் கிராமத்திற்கும் பெறுமை சேர்த்துள்ளனர்.
இதனை பாரட்டும் விதமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் காசி நாதபுரம் ஊர் பொது மக்கள் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பாரட்டு விழா
நடைப் பெற்றது.
புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால் விநாயகம், துணை தலைவர் வேல்த்துரை ஆகியோர் தலைமையில் புதுப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேள தாளம் முழங்க பட்டாசு வெடித்து ஊர்வலமாக காசிநாதபுரம் கிராமத்திற்கு அழைத்து வந்தனர்
அதன் பின்னர் அங்குள்ள கோவில் வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ் ரமினா (எ) குருவம்மாள் தமிழ் பட்டதாரி ஆசிரியர் கனகராஜ் ஆங்கில பட்டதாரி ஆசிரியை பிச்சம்மாள்,
அறிவியல் பட்டதாரி ஆசிரியை அந்தோணி வின்சென்ட், சமூக அறிவியல் ஆசிரியர் சுரேஷ், கணிதம் பட்டதாரி விஜய லெட்சுமி சமுக ஆர்வலர் முன்னாள் இராணுவ கேப்டன் ராம்குமார் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி மாணவ மாணவிகள் பெற்றேர்களுடன் கொண்டாடினர்கள் .
இந்த நிகழ்வில் எஸ் எம் சி நிர்வாகிகள், கலைச் செல்வி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்தானம்,சிங்கம்பாறை உடற்கல்வி ஆசிரியர் ஜோசப் ரத்தினம்,வில்லிசை புலவர் முருகன், முன்னாள் துணை தலைவர் பேச்சிமுத்து,
காசிநாதபுரம் முத்து வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.