திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தனியார் அரங்கில் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது..
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு வணிகர்கள் பேரவை திருவாரூர் மாவட்ட சங்க தலைவர் வி கே.கே.ராமமூர்த்தி, நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.
மேலும் புதியதாக பதவியேற்றுள்ள வர்த்தக சங்கத் தலைவர் செல் சரவணன், துணை தலைவர் வேல், பொருளாளர் தினேஷ், செயலாளர் கணேஷ், துணை செயலாளர் சந்தானம் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர்.
இந்த விழாவில்
நன்னிலம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினர்.
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.. “வணிகர்கள் போதை தரக்கூடிய பொருட்கள் எதையும் விற்கக் கூடாது.. என தடை சட்டம் இருக்கிறது.. இது சமுதாயத்தை கெடுக்கக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. இதற்கு வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொழில்நுட்ப முன்னேறி வரும் பொழுது குற்றங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது
அதைப்போல இப்பகுதியில் உள்ள வணிகர்கள் ஒவ்வொரு கடையிலும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் கடையின் உள்ளேவும் வெளியேவும் கேமரா வைக்க வேண்டும்.. குற்றத்தை தடுக்கவும் எதுவாக இருக்கும் எனவே அனைவரும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.