பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே காட்டுக்குறிச்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய திருவிழா அழகு காவடி பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே காட்டுக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ருத்ர காளியம்மன் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஏகாம்பர ஈஸ்வரர் சித்தி விநாயகர் ஓம் சக்தி வடுவச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக வெண்ணாறு ஆற்றங்கரையில் இருந்து பால்குடம் அழகு காவடி எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் ஏற்பாடுகளை
காட்டு குறிச்சி கிராமவாசிகள் மற்றும் நாட்டாமைகள் செய்திருந்தனர் .