R. கல்யாண முருகன் செய்தியாளர்.
விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகரில் எழுந்தருளி இருக்கும் ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கலந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும் வீதி உலாவும் நடைபெற்றது.பெருமாள் தாயாருக்கு திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது .
பத்தாம் நாள் நிகழ்ச்சியாக உற்சவர்கள் பல்லக்கில் வீதி உலா வந்து மக்களுக்கு அருள்பாளித்தனர்.