எஸ்.செல்வகுமார் சீர்காழி
சீர்காழி அருகே கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் எதிரே கிராம மக்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் அடுத்த வைத்தியநாதபுரம் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது திருவிழாவின்போது காளி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று சாமி ஊர்வலம் நடந்தது அப்போது இரு சமூகத்தினர் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் கோவில் திருவிழாவின் போது ஒரு சமூகத்தில் சார்பில் நடந்த சாமி ஊர்வலத்தில் திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர் இதனிடையே பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என மற்றொரு சமூகத்தினர் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் குவிந்தனர்
உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை சீர்காழி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் மறியலை கைவிட்டனர். காவல் நிலையத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.