மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, வில்லாபுரம் புதுநகர் அரிமா சங்கம், மதுரை மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேசன், மதுரை செய்தியாளர்கள் சங்கம் மற்றும் மதுரை ஜெம் ரோட்டரி சங்கம் இணைந்து
போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி மதுரையில் நடைபெற்றது.
ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணி திருப்பாலை யாதவா கல்லூரி வரை சென்று மீண்டும் ரேஸ் கோர்ஸ் மைதானம் வந்தடைந்தது.
15 கி.மீ தூரம் நடைபெற்ற ஸ்கேட்டிங் பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் 350 க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வில்லாபுரம் அரிமா சங்க நிறுவனத் தலைவர்
அரிமா இப்ராஹிம் சுல்தான் சேட், வில்லாபுரம் குடியிருப்போர் நல சங்க பொருளாளர் ஜெயபிரகாஷ், ராஜா முகமது வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை அரிமா காதர் மைதீன்
தலைமையில் வில்லாபுரம் புதுநகர் பேட்மிட்டன் சங்க பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர்.
பேரணியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர் களுக்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், வில்லாபுரம் புதுநகர் குடியிருப்பு ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் இப்ராஹிம் சுல்தான் ஷேட், மதுரை செய்தியாளர்கள் சங்கத் தலைவர் கதிரவன்
மற்றும் ரோட்டரி சங்க பொறுப்பாளர் கள் கலந்துகொண்டு சான்றிதழ்கள் வழங்கினர்.
மாநகர போக்குவரத்து காவல்துறை ஆணையர் குமார் தலைமையில் போக்குவரத்து போலீசார் பேரணி நடைபெற்ற இடங்களில் மாணவர்கள் செல்வதற்கு வசதியாக போக்குவரத்தை தடையின்றி சீர் செய்து கொடுத்தனர்.