தென்காசி மாவட்டம் குற்றாலம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் சீரான மழையின் காரணமாக எல்லா அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக காணப்படுகிறது முக்கிய அறிவிகளான பழைய குற்றாலம் மெயின் அருவி புலி அருவி ஐந்தருவி அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்
அதிகரித்து காணப்படுகிறது பயணிகள் குளிப்பதற்கு ஏதுவாக காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
மே ஜூன் மாதங்களில் மட்டும் கிடைக்கக்கூடிய அரியவகை பழங்களான மங்குஸ்தான் ஸ்டார் பழம் பலா மாம்பழம் ரம்முட்டான் முட்டை பழம் பல வகையான பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் இப்ப பழங்களை வாங்கி உண்டு மகிழ்ந்து செல்கின்றனர்
குற்றால பகுதிகளில் குளிர்ந்த காற்றும் ரம்யமான சூழ்நிலையும் நிலவுவதால் பயணிகளின் வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது