தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் அனைவரையும் வரவேற்று பேசினார்.அப்போது , மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த தினத்தையொட்டி ஜுன் 3ந்தேதி பாவூர்சத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 101 வது பிறந்த தின விழாவை கொண்டாடுவது குறித்தும், பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியும் பேசினார்.
இந்த கூட்டத்தில், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இலத்தூர் பூ.ஆறுமுகச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை, எஸ்.கே. முத்துபாண்டி, மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் க.கனிமொழி , பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம், சீவநல்லூர் கோ.சாமித்துரை, ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தென்காசி மேற்கு வல்லம் எம்.திவான்ஒலி, கிழக்கு ஆர்.எம்.அழகுசுந்தரம், செங்கோட்டை ஆ.ரவிசங்கர்,
கீழப்பாவூர் சிவன்பாண்டியன், கடையும், ஜெயக்குமார்,மகேஷ் மாயவன், ஆலங்குளம் எம்.பி.எம்.அன்பழகன், , நகர செயலாளர்கள் தென்காசி ஆர்.சாதிர், செங்கோட்டை வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், கடையநல்லூர் அப்பாஸ், சுரண்டை கணேசன், மாவட்ட திமுக
இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ணராஜா,
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சு.தங்கராஜ் பாண்டியன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன், மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர். தொண்டரணி அமைப்பாளர் இ.இசக்கிபாண்டியன், வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில், வழக்கறிஞர் சு.வேலுச்சாமி, பேரூர் திமுக செயலாளர்கள் மேலகரம் இ.சுடலை, குற்றாலம் குட்டி, இலஞ்சி முத்தையா, பண்பொழி கரிசல் அ.ராஜராஜன், சாம்பவர் வடகரை முத்து, சுந்தரபாண்டியபுரம் வே. பண்டாரம், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், நகராட்சி தலைவர் மூப்பன்ஹபிபூர்ரகுமான், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், சே.தங்கப்பாண்டியன், சாம்பவர் வடகரை கோ.மாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் அ.கலாநிதி, மாரிச்செல்வி, மகளிரணி பாண்டியராணி, ஷோபனா, நிர்வாகிகள் ராம்ராஜ்,
கே.மோகன்ராஜ், எல்.ஆறுமுகம். அ.சேக்பரீத், சுந்தரபாண்டியபுரம் மாரிமுத்து பாண்டியன், சேக்ஷபீக்அலி, நசீர், முத்துசுப்பிரமணியன், கஜேந்திரன், துவரங்காடு முருகன், குற்றாலம் சுரேஷ், கிருஷ்ணராஜ், சுப்பிரமணியன், அழகுதமிழ், சுதன்ராஜா, வெல்டிங் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் கென்னடி அனைவருக்கும் நன்றி கூறினார்.