வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரம் நடும் விழா.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சூர்யா பவுண்டேஷன் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடந்தது.
இதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மருத்துவர் டாக்டர் ஜெகதீசன் தலைமை தாங்கினார்.
சூர்யா பவுண்டேசன் தலைவர் சதாசிவம் முன்னிலை வகித்தார். முன்னதாக அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மாநில பொருளாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் மருதைகலாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.