தென்காசியில் தொழிற்சாலை கொண்டுவர மக்களவையில் எனது குரல் ஒலிக்கும் ராணி ஸ்ரீ குமார் பேட்டி;-

தென்காசி பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் தென்காசி, கடையநல்லூர்,
வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளடங்கிய ஆறு தொகுதிகளில் மொத்தம் பதிவான வாக்குகள்10,29,584 ஆகும். இந்த வாக்குகள் எண்ணும் பணி கொடிக் குறிச்சி யு.எஸ்.பி கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகளும் அதன் பின் மின்னனு வாக்கு பதிவு எந்திரங்களில் பதிவாகிய வாக்குகள்
-24 ரவுண்ட்களில் பெற்ற வாக்குகள் எண்ணிக்கையில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீ குமார் 4, 25, 679- வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 2,29,480- வாக்குகளும் , மூன்றாவது இடத்தில் பிஜேபி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜான்பாண்டியன் 2,08,825- வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 1,30,335 வாக்குகளும், நோட்டாவிற்கு 17, 165 வாக்குகளும் கிடைத்தது,

திமுக வெற்றி பெற்ற தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி சாதனைகளை
மக்களிடம் எடுத்துக்கூறியதால் வெற்றிபெற முடிந்தது.

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். மாநில இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி மற்றும் மாவட்ட பொறுப்பு
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமசந்திரன் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மற்றும் நகர,
ஒன்றிய, கூட்டணி கட்சிகளுக்கும், பணியாற்றிய தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி தென்காசி மக்களவை தொகுதியில் தொழிற் சாலை அமைக்க எனது ஒலிக்கும் எனவும் அனைத்து வாக்குறுதியை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *