திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் முகப்பு வாயிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் விசிக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றதை தொடர்ந்தும் நன்றி தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து விட்டு பேருந்து நிலையத்திலிருந்து தந்தை பெரியார் சிலை வரை நடந்து சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர்
பொதினிவளவன், துணைச் செயலாளர் பாவேந்தன்,
மாவட்ட பொருளாளர் திருமாறன்,மண்டல துணைச் செயலாளர் ஜலால் முகமது, இஸ்லாமிய ஜனநாயக பேரவை அபுல் கலாம் ஆசாத், தொகுதி செயலாளர் முத்தரசு,வழக்கறிஞர் குமாரசாமி,நகர செயலாளர் மணவாளன்,நகர பொருளாளர்
தமிழண்ணன்,ஒன்றிய செயலாளர்கள் ஜீவானந்தம், ஜெயசீலன், மற்றும் போர்க்கொடியேந்தி, இனியண்,
தோமையர் சின்னத்தம்பி,ஆபிரகாம்,அன்பழகன், திருமாறன், காளிமுத்து, மணிமுத்து,வளவன் வாய்க்கால், சுரேஷ் பாபு,மில்லர் மண்டேலா, சுரேஷ்,
முரளிவளவன்,வீரவேல், முரளி, அருண், ஈஸ்வரன், கார்த்திக், பார்த்திப சரவணன், சக்திவேல், கோபால், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.