தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் தரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு. மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புகார் சமூக ஆர்வலர் ஒருவர் அளித்ததன் பெயரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆலோசனை பெயரில் தென்காசி உட்கோட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ள பொட்டல்புதூர் பகுதிக்கு திடீரென்று ஆய்வுக்கு சென்றனர்
புகாரின் தன்மைக்கேற்ப கடையை முழுவதும் சோதனை செய்தனர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக். பிளாஸ்டிக் கவர்.சப்பாத்தி. வறுத்த எண்ணெயில் பொறிக்கப்பட்ட கலர் ரசாயனம் கலந்த சிக்கன் இவைகளை பினாயில் ஊற்றி அளித்து தரமற்றமுறையில் உணவு தயார் செய்தல் சுகாதாரமற்ற முறையில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு கடைக்கு தண்டத் தொகையாக 3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
மேலும் கடையை சுத்தப்படுத்தி தரமான முறையில் உணவு விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும் இதுபோல் தொடர்ந்து சுகாதார மற்ற முறையில் உணவுகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து சென்றார்
உணவுகளின் தரம் குறித்து எந்தவித சமரசம் இன்றி செயல்படும் உணவு பாதுகாப்பு அலுவலர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்