தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ஆ.மணி,அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் பாமக வேட்பாளராக செளமியா அன்புமணி உள்ளிட்ட 26 பேர் போட்டியிட்டனர்.
இதில் திமுக வேட்பாளர் ஆ.மணி 432667 வாக்குகளும் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி411367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் 293629 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தை பிடித்தார்.பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி யை காட்டிலும் கூடுதலாக 21300 வாக்கு பெற்று திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றிபெற்றார்.
இதனையடுத்து நேற்று சென்னையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பா.பழனியப்பன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.